பொது செய்தி

தமிழ்நாடு

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

கோவை:முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற தகுதியானவர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார்.சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும், இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், 'முதலமைச்சர் மாநில இளைஞர் விருது', ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.15 முதல் 35 வரையுள்ள மூன்று ஆண்கள், மூன்று பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படும். இவ்விருதில், 50 ஆயிரம் ரூபாய், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை அடங்கும்.விண்ணப்பதாரர்கள், 1.4.2019ல் 15 வயது நிரம்பியவர்களாகவும், 31.3.2020ல் 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டியது அவசியம்.மேற்குறிப்பிட்ட காலங்களில் செய்த சேவைகள் மட்டுமே, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.மத்திய, மாநில அரசு பணிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன், 30ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X