ஊரணிக்கு நிதி ஒதுக்கீடு இல்லை| Dinamalar

ஊரணிக்கு நிதி ஒதுக்கீடு இல்லை

Added : மே 20, 2020
Share

கமுதி:கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 53 ஊராட்சிகளில் 136 ஊரணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியில் 2019ல் பணிகள்துவங்கியது. எட்டு மாதங்களுக்கு முன் பணிகள் அனைத்தும் முடிந்தது.

ஆனால் 50 சதவீதம்ஊரணிகளுக்கு மட்டும் தலா 50 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய பட்டு உள்ளது.பணிகள் முடிந்து 8 மாதங்களாகியும் முடிவடைந்த ஊரணி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் கான்ட்ராக்டர்கள் மட்டுமின்றி, முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் தினமும் முடிந்த ஊரணி பணிகளுக்கு நிதி கேட்டு கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலைந்த வண்ணம் உள்ளனர்.

முடிந்த ஊரணி பணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தில் நிதி இருந்தும், ஒதுக்கீடு செய்யாததால் கடன் வாங்கி பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே குடி மராமத்து திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊரணி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X