பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

Added : மே 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; ஓட்டுனர் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி வழங்கக் கோரி கள்ளக்குறிச்சி தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:கள்ளக்குறிச்சியில் 1,250 ஓட்டுனர் குடும்பங்கள் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, சங்கத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X