பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : மே 20, 2020
Share
Advertisement

பயங்கரவாதி கைதுஜம்மு: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த சந்தர்காந்த் சர்மா மற்றும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ரஸ்தம் அலி, கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், அவரை, ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கைது செய்தனர்.

சில்மிஷ போலீஸ் கைதுஜெய்ப்பூர்: புகார் கொடுக்க வந்த பெண்ணை, தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த, உதவி சப்-இன்ஸ்பெக்டர், கைது செய்யப்பட்டார்.கப்பல் ஊழியர்கள் வந்தடைந்தனர் பனாஜி: ஐரோப்பிய நாடான இத்தாலியில் நிறுத்தப்பட்ட கப்பலில் பணியாற்றும், கோவாவைச் சேர்ந்த, 414 கப்பல் ஊழியர்களை அழைத்து வருவதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, முதல்கட்டமாக, 168 பேர், சிறப்பு விமானத்தில், பனாஜி வந்தடைந்தனர்.

மற்றவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பாக்., ராணுவம் அத்துமீறல் ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி அருகே, பாக்., ராணுவம் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியில் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்ந்து, ஐந்தாவது நாளாக, இதுபோன்ற தாக்குதலில், பாக்., ராணுவம் ஈடுபட்டது. இதற்கு, நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.யு.ஏ.இ., புறப்பட்ட மருத்துவக் குழுகொச்சி: மேற்கு ஆசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில், 'கொரோனா' பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கேரளாவில் இருந்து, சிறப்பு மருத்துவக் குழு புறப்பட்டுள்ளது.

மொத்தம், 105 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். வளைகுடா நாடுகளில் செயல்படும், ஒரு தனியார் மருத்துவமனை குழு சார்பில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X