பொது செய்தி

தமிழ்நாடு

துணை மின்நிலையம் விவகாரம் ஆர்.டி.ஓ., பேச்சில் சுமூகம்

Added : மே 20, 2020
Share
Advertisement
 துணை மின்நிலையம் விவகாரம் ஆர்.டி.ஓ., பேச்சில் சுமூகம்

வடவள்ளி:நவாவூரிலுள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், துணை மின் நிலையம் அமைக்கும் விவகாரத்தில், வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.நவாவூரில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், ஒரு ஏக்கர் நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்க, அரசு நிலம் ஒதுக்கியது. இப்பகுதியில் மேற்கு புறவழிச்சாலை வருவதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு பதிலாக, பல்கலை வளாகத்தில் உள்ள வேறொரு இடத்தில், ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.கடந்த 14ம் தேதி, மாற்றி வழங்கப்பட்ட இடத்தில் இருந்த செடி மற்றும் மரங்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில், மின் வாரியத்தினர் ஈடுபட்டனர்.அண்ணா பல்கலை நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மரம் வெட்டும் பணி கைவிடப்பட்டது. இவ்விவகாரம் குறித்து, அண்ணா பல்கலை நிர்வாகத்தினர் மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், நேற்று பேச்சு நடத்தினார். முடிவில், துணைமின் நிலைய பணிகளை துவங்க, அண்ணா பல்கலை நிர்வாகத்தினர் சம்மதித்தனர்.இதனையடுத்து, விரைவில், துணைமின் நிலைய பணிகள் துவங்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X