சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூறாவளி: வாழை மரங்கள் சாய்ந்தன

Added : மே 20, 2020
Share
Advertisement
 சூறாவளி: வாழை மரங்கள் சாய்ந்தன

கமுதி:கமுதி பகுதியில் சில நாட்களாக பலத்த சூறாவளிகாற்று, இடி, மின்னலுடன் மழை பெய்கிறது.

கமுதி அருகே கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வாழை, மிளகாய், கத்தரி, தக்காளி விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன் தினம் இரவு வீசிய சூறாவளிக் காற்றில் கோரைப்பள்ளம் பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்தன.இதனால் வாழை குலைகள் மகசூல் நிலையை அடைந்துள்ள நிலையில் சாய்ந்ததால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் வருவாய் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு சூறாவளிக் காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் அதிக வருவாய் இழப்பை தந்துள்ளது.இதுகுறித்து கோரைப்பள்ளம் இயற்கை விவசாயி ராமர் கூறுகையில், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளை காக்க, உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X