பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.64 கோடியில் போலீஸ் குடியிருப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 2.64 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அடுக்குமாடி காவலர் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., அலுவலகத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், வரஞ்சரம், கீழ்குப்பம், கரியாலுார் மற்றும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் என 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.தற்போது கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமாக செயல்பட்டு வரும் நிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டருக்கு கச்சேரி சாலையிலும், கோட்டைமேட்டில் போலீசாருக்கு என 22 குடியிருப்புகள் இருந்தன.இடம் பற்றாக்குறை, தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பின்மை காரணமாக அங்கு போலீசார் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இதனையடுத்து, பாழடைந்து காணப்பட்ட காவலர் குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய காவலர் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்பேரில், கடந்தாண்டு பழைய போலீஸ் குடியிருப்பு அகற்றப்பட்டு, அந்த இடத்தில், 24 புதிய காவலர் குடியிருப்புகள் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் மூலம் 2.64 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அடுக்குமாடி காவலர் குடியிருப்பு கட்டுமான பணிகள் கடந்தாண்டு துவங்கியது. தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்து, பெயிண்ட்டிங், எலக்ட்ரீசியன் ஒர்க் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் திறப்பு விழா நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X