சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சலுான் கடைகள்: அரசு பதில் அளிக்க உத்தரவு

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : சலுான் கடைகளை திறக்கக் கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர், முனுசாமி தாக்கல் செய்த மனு:ஊரடங்கு உத்தரவால், முடி திருத்தும் கடைகள் மூடப்பட்டன. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள, 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதம், 15 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வந்த அவர்களுக்கு, தற்போது எதுவும் இல்லை.பசி, பட்டினியால் குடும்பம் வாடுகிறது. எங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும்படி, முதல்வருக்கு மனு அனுப்பினோம். நிபந்தனைகள் விதித்து, சலுான் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, கோரினோம்.

முடி திருத்தும் தொழிலில் உள்ள ஒவ்வொரு ஊழியருக்கும், 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சலுான் கடைகளை திறக்க, அனுமதி அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி பகுதிகள் சிலவற்றில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 28ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X