கொரோனாவை விட 'அம்பான்' புயலால் பேரழிவு: மம்தா

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Mamata Banerjee, West Bengal, Cyclone Amphan, Cyclone Amphan Update, மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: கொரோனா வைரசை விட, அம்பான் புயல் மேற்குவங்கத்தில் பேரழிவை ஏற்படுத்துகிறது என அம்மாநில- முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

'அம்பான்' புயல் மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே, இன்று(மே 20) இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. புயலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.


latest tamil news




புயல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீடியாக்களிடம் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம்.


latest tamil news



ஒருபுறம் கொரோனாவுடன் நாங்கள் போராடுகிறோம். மறுபுறம் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள். இவை அனைத்திற்கும் மேலாக தற்போது புயல். அம்பான் புயல் கொரோனாவை விட பேரழிவை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். இச்சூழலில் அரசியல் செய்வதை விடுத்து, மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து, மக்களை காக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
21-மே-202012:24:05 IST Report Abuse
Raghuraman Narayanan If honest figures of corona is disclosed, people will decide.
Rate this:
Cancel
21-மே-202010:03:43 IST Report Abuse
ஆப்பு மக்களை முடக்கறதுல மத்திய அரசு, மாநில அரசு, கொரோனான்னு போட்டி நிலவுது.இப்போ புதுசா ஆம்பன் புயல்.
Rate this:
Cancel
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
21-மே-202009:45:11 IST Report Abuse
ديفيد رافائيل அம்பான் புயல் தேனி மாவட்டத்தை கண்டுக்கல, பயங்கர வெயில் தாக்குதல் மட்டுமே இருந்துச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X