சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் தொடரும் மணல் கொள்ளை

Added : மே 20, 2020
Share
Advertisement

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மணல் கொள்ளையைத் தடுக்க கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் மணி நதி வடபாலபட்டு, புது பாலப்பட்டு, அரசம்பட்டு, பூட்டை, சங்கராபுரம் வழியாக சூளாங்குறிச்சி டேம் சென்று, அங்கிருந்து விருத்தாசலம் வழியாக கடலில் கலக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் பெய்த தொடர் மழையால் மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சங்கராபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராம ஏரிகள் நிரம்பின. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தற்போது மணி நதியில் மணல் அதிகஅளவில் குவிந்துள்ளது.இதனால், சங்கராபுரம் பகுதியில் பூட்டை, வடபாலபட்டு, புது பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி ஆகிய கிராமங்களில் மணல் கொள்ளை தட்டுப்பாடின்றி ஜரூராக நடக்கிறது. கடந்த 2 மாதங்களாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வாரமாக போலீசார் டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மணல் கடத்தல்காரர்கள் சுதந்திரமாய் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு சங்கராபுரம் பகுதியில் உள்ள ஆறுகளில் தொடர் மணல் கொள்ளை நடந்ததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாய கிணறுகள் மற்றும் வீட்டில் உள்ள போர்களில் தண்ணீர் மட்டம் குறைந்தது. இதனால், கடந்த ஆண்டு சங்கராபுரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினர்.அதே போன்ற நிலை இந்த ஆண்டும் ஏற்படாமல் இருக்க, சங்கராபுரம் பகுதியில் தொடரும் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நீலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X