அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொது தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளை நடத்துவதற்கு, பள்ளி கல்வி துறைக்கு, மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், ஜூன், 15 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், ஜூலை, 1 முதல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு நடத்தும் துறைகள் சார்பில், உரிய அனுமதி கேட்டு, மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவற்றை பரிசீலித்த உள்துறை, சில கட்டுப்பாடுகளுடன் தேர்வை நடத்த, அனுமதி அளித்துள்ளது.அதன் விபரம்:தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; சோப்பால் கை கழுவுவது, கிருமி நாசினியால் சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நோய் தொற்று உள்ள பகுதிகளில், தேர்வு மையம் அமைக்க கூடாது. மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் தேர்வை நடத்தும் தேதிகளை, முரண்பாடுகள் இன்றி, நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X