சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

Added : மே 20, 2020
Share
Advertisement

வடவள்ளி:வேடபட்டி, பெருமாள் நாயுடு வீதியை சேர்ந்தவர், அருண்பிரகாஷ், 41. இவரும், இவரது நண்பர் ராஜுவும், நேற்று முன்தினம் மாலை, நம்பியழகன்பாளையத்தில் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த வடமாநிலத்தவர்களை, நம்பியழகன்பாளையத்தை சேர்ந்த, மதன், ஜெகன், ராஜன் ஆகிய மூவரும், மிரட்டி கொண்டிருந்தனர்.அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் ராஜு, அவர்களை தட்டிக்கேட்டனர். கோபமுற்ற மூவரும், அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த இருவரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடவள்ளி போலீசில் அளித்த புகாரின்பேரில், ராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மதன் மற்றும் ஜெகனை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X