பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தாசில்தாரிடம் கோரிக்கை

Added : மே 20, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் தங்கியிருக்கும் உத்தரபிரதேச மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி தாசில்தாரிடம் முறையிட்டனர்.உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் திருக்கோவிலுாரில் தங்கி, பானிபூரி, ஐஸ் உள்ளிட்ட வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.இருப்பினும், வீட்டு வாடகை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு பணமின்றி அவதிப்படுவதால் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து 25க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலுார் தாசில்தாரிடம் முறையிட்டிருந்தனர்.இந்நிலையில் உடனடியாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி 15க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் நேற்று காலை திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். தாசில்தார் சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.பயணத்திற்கான நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டிருப்பதாகவும், சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் உறுதிமொழி கடிதம் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.மேலும், விரைவில் ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X