பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு தயாராகும் அரசு கல்லுாரி

Added : மே 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கொரோனா சிகிச்சைக்கு தனிமைபடுத்தபட்ட வார்டாக தயாராகி வரும் அரசு கலைக் கல்லுாரியில் சாய் தளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு கலைக்கல்லுாரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு 200 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. அதற்காக சிறுவங்கூர் சமத்துவபுரத்திற்கு எதிரே உள்ள அரசு கலைக்கல்லுாரியின் 20க்கும் மேற்பட்ட அறைகளில், 200 படுக்கைகள் அமைக்கப்பட்டு தயாராகி வருகிறது.அத்துடன் நோயாளிகளை கல்லுாாரியின் மூன்று தளங்களில் சிரமமின்றி அழைத்துச் செல்ல சாய்தளம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கல்லுாரியின் முதல்வர் அறை, மருத்துவர்கள் அறையாக மாற்றமடைந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X