பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் குறைந்த கூட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சரக்கு வாங்க ஆளின்றி டாஸ்மாக் கடைகளில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. 43 நாட்கள் முடிந்து நிபந்தனைகளுடன் கடந்த 7ம் தேதி திறக்கபட்டது. இரண்டு நாட்கள் மட்டுமே திறந்த நிலையில், கோர்ட் உத்தரவால் மூடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் 16ம் தேதி கடைகள் திறக்கப்பட்டன. இதனால், ரங்கநாதபுரம், நல்லாத்துார் பகுதியில் உள்ள இரு கடைகளிலும் தினமும் 1000க்கும் மேற்பட்டோர் சரக்கு வாங்க குவிந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.மீண்டும் கடைகள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் குடிமகன்கள் பை பையாக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும், இரவு 7:00 மணிவரை கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்தது. இதன் காரணமாக டாஸ்மாக்கில் சரக்கு வாங்க ஆள் இன்றி கடைகளில் காற்று வாங்கி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X