பொது செய்தி

தமிழ்நாடு

உலர் களமாக மாறிய பிரதான சாலை

Added : மே 20, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்;திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு சொந்த கட்டடம் இல்லாமல் விளைபொருட்களை சாலையிலேயே கொட்டி வைக்கும் அவலம் இருப்பதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கென சொந்த கட்டடம் இல்லாததால், விவசாயிகள் தாங்கள் கொண்டும் வரும் நெல்லை சாலையிலேயே கொட்டி வைக்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர்.கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் தற்காலிமாக பேரூராட்சி கட்டடத்தில் மார்க்கெட் கமிட்டி துவங்கியது, இதற்காக பேரூராட்சி சார்பில் 4,600 ரூபாய் மாத வாடகையாக வசூலிக்கப்படுகிறது. தற்போது திருவெண்ணெய்நல்லுார், பெரியசெவலை, கோகுலாபுரம், சரவணம்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து நெல் போன்ற விளை பொருட்கள் இங்கு கொண்டு வரப்படுகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல்லை பாதுகாப்பாக வைக்க போதிய இட வசதி இல்லாமல் உள்ளது. அதனால், வேறு வழியின்றி சாலையில் கொட்டி உலர்த்தி வருகிறோம். இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆனால், கமிட்டி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கொண்டு வருகின்ற நெல்லை மழையிலும், பனியிலும் நனைந்து போதிய விலை கிடைக்காமல் போகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X