தீயணைப்பு நிலையங்களுக்கு90 பிரத்யேக ஆடைகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு நிலையங்களுக்கு90 பிரத்யேக ஆடைகள் வழங்கல்

Added : மே 20, 2020
Share

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களுக்கு 90 பிரத்யேக ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் கொரோனா தடுப்பு பணிகளில், ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதித்த பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசி தெளிக்கின்றனர். இந்த தீயணைப்பு வீரர்களுக்கு பிரத்யேக ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்காஸ்ட்ரோ தலைமை தாங்கி பிரத்யேக ஆடைகளை வழங்கினார். மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களுக்கு 90 பிரத்யேக ஆடைகள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X