பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பார்த்த பின் 'டிவி'யில் வரும்!

Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சமீபத்தில் மறைந்த, பிரபல திரைப்பட கதாசிரியர், இயக்குனர் விசு பற்றி, அவரின் உதவியாளர்களில் ஒருவரான, 'உதயம்' ராம்: விசு பல படங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்திருந்தாலும், சின்னத்திரையில் அவருக்கு மிகவும் பெயர் வாங்கித் தந்தது, 'அரட்டை அரங்கம்' பேச்சு நிகழ்ச்சி தான்.

சன், 'டிவி'யில் ஞாயிறுதோறும், 1994 மே முதல், 2005 டிசம்பர் வரை, 600 வாரங்கள், அந்த நிகழ்ச்சி நடந்தது.அதில் பங்கேற்ற பலர், இப்போது மிகவும் பிரபலமான பேச்சாளர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு மேடை போட்டு கொடுத்தது, அரட்டை அரங்கம் தான். அப்போது, முதல்வராக, தி.மு.க., தலைவர் கருணாநிதி இருந்த நேரம். 'டிவி'யில் ஒளிபரப்பு செய்யப்படும் முன், அரட்டை அரங்கம் கேசட், கருணாநிதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதை அவர் பார்த்த பிறகு தான், 'டிவி' அலுவலகத்திற்கு அனுப்பி வைப்போம். சில நேரங்களில், கருணாநிதி சொல்லிய திருத்தங்களை மேற்கொண்ட பிறகே, நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளோம்.

அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை முதலில், சென்னையில் தான், பெரிய மண்டபங்களில் நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது தான் ஒரு நாள், 'சென்னை மக்கள் அறிவுஜீவிகள். நான்கு சுவர்களுக்குள் உண்மை பேசுவர். 'ஆனால், பொதுமேடையில் அவர்களிடம் இருந்து, உண்மையான தகவல் வராது. எனவே, இனிமேல், சென்னை தவிர்த்து, பிற நகரங்களில், நாடுகளில் நடத்துவோம்' என்றார் விசு.அதன் பிறகு தான், தமிழகத்தின் பல ஊர்களிலும், நகரங்களிலும், வெளிநாடுகளிலும் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு, 'டிவி'யில் தொடர்களாக காண்பிக்கப்பட்டன.

அப்படித் தான், தஞ்சாவூர் மாவட்டம், அபிராமபட்டினத்தில், 90 வயது மூதாட்டி, தனியாளாக வாழ்ந்து வருகிறார் என்பதை அறிந்து, அவரை பேட்டி கண்டு, நிகழ்ச்சிக்கும் அவரை வரவழைத்து பேச வைத்தோம். அப்போது தான் அவர், சுதந்திரப் போராட்ட, தியாகி ஒருவரின் மனைவி என்பது தெரிந்தது.அதற்குப் பின், அந்த மூதாட்டியை, விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்த விசு, தன் சொந்த செலவில், வசதிகளை செய்து கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன் தான், அந்த மூதாட்டி இறந்தார். அதுவரை, அவருக்கு தேவையான வசதிகளை செய்தவர் விசு தான்.கனடாவுக்கு சென்றிருந்த போது, விசுவுக்கு கடும் காய்ச்சல். அவரால் வெளியே வர முடியவில்லை.

எங்களுக்கோ, சுற்றிப் பார்க்க ஆசை. அவர் ஓட்டலில் ஓய்வெடுத்தார். 'அடுத்து இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்; நீங்கள் போய் சுற்றிப் பார்த்து வாருங்கள்' என அனுப்பி வைத்தார். அவருக்கு ரொம்ப நல்ல மனசு. அவரிடம் கற்றதும், பெற்றதும் ஏராளம்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-மே-202007:47:44 IST Report Abuse
Bhaskaran Pothu medayil unmai pesinaal arasiyalVaathigal thaathaa gal idam adivaanguvathu yaaru
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
21-மே-202006:32:23 IST Report Abuse
நிலா ஆமாம் திமுக டிவி சேனல்களுக்கு கட்டுமரம் தானே சென்சார் போர்டுதலைவர் அரைகுறை ஆடையுடன் ஆடும் மானாட மயிலாட தானே அவரின் விருப்ப நிகழ்ச்சி
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
21-மே-202013:01:14 IST Report Abuse
s.rajagopalanதன்னை கலாநிதி மாறன் ஒரு முறை கூட சந்திக்க வில்லை என்று ஆதங்கப்பட்ட விசு , சன் டி வி யுடனிருந்த ஒப்பந்தம் முடிந்த பிறகு 'விட்டது ...' என்று மகிழ்ச்சியுடன் வெளியேறினார...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X