பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் வாடிப்போனது வாழை விவசாயம்

Added : மே 20, 2020
Share
Advertisement

செஞ்சி;செஞ்சி பகுதியில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நம்பி சாகுபடி செய்யப்பட்ட வாழை விவசாயம் கொரோனாவால் நசிந்து போனதால் வாழை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.செஞ்சி பகுதியில் நெல், கரும்பு, வேர்க்கடலை ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இவற்றுடன் காய்கறிகள், தானிய வகைகள், பூக்கள் மற்றும் வாழை சாகுபடியும் மேற்கொள்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் 1000 ஏக்கர் அளவிற்கு வாழை சாகுபடி நடந்து வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் வாழை சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதியில் சாகுபடி செய்யும் வாழை மரங்கள் பழங்களின் தேவைக்காக சாகுபடிக்காக செய்வதில்லை.திருமணம், கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம், கோவில் திருவிழாக்களின் தேவைக்காக குலையுடன் கூடிய வாழை மரங்களுக்காக சாகுபடி செய்கின்றனர்.செஞ்சி, அனந்தபுரம், வளத்தி, மேல்மலையனுார், அவலுார்பேட்டை, ஆலம்பூண்டி, அப்பம்பட்டு, நாட்டார் மங்களம் உட்பட செஞ்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன.திருமண நாளில் இந்த மண்டபங்களின் முன்பு 6 முதல் 20 வாழை மரங்கள் வரை வசதிக்கு ஏற்ப கட்டி பந்தல் அலங்காரம் செய்வார்கள். கும்பாபிஷேகங்களிலும் 20 முதல் 30 வாழை மரங்களை பந்தலில் கட்டுவார்கள். அத்துடன் எல்லா விழாக்களுக்கும் பந்தியில் விருந்துக்கு வாழை இலை பயன்படுத்துவார்கள்.விவசாயிகள் ஒரு ஏக்கரில் 200 மரங்கள் வரையில் ஓராண்டுக்கு வளர்க்கின்றனர். குலையுடன் உள்ள வாழைமரம் ஒன்றை 400 முதல் 600 வரை விற்கின்றனர். 200 முழு இலைகள் உள்ள ஒரு கட்டு இலை ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் ஏக்கருக்கு 2 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் இதில் 40 சதவீதம் சாகுபடிக்கு செலவாகி விடும்.இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் மண்டபங்களில் திருமணம் நடத்தவும், கோவில்களில் விழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் விருந்து உபசரிப்புகள் இன்றி வாழை இலையின் தேவையும் குறைந்தது,வாழை இலை பயன்படுத்தும் பெரிய ஓட்டல்களும் மூடப்பட்டன. இதனால் வாழைமரம், வாழை இலை இரண்டிற்கும் தேவை 90 சதவீதம் குறைந்தது. பெரும்பாலான வாழைத் தோப்புகளில் வாழை குலை தள்ளி உள்ளது. வாழை பழத்தின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதன் விலையும் குறைந்துள்ளது.எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சில இடங்களில் விவசாயிகள் வாழை மரங்களை அழித்து விட்டனர். மீதம் உள்ளவர்களும் சாகுபடி செலவை மீட்டால் போதும் என்ற பரிதாப மனநிலையில், வாடிப்போய் உள்ளனர்.ஓட்டல்களில் இப்போது உட்கார்ந்து சாப்பிட தடை உள்ளது. இதற்கு ஜிகினா கவர்களையும், பிளாஸ்டிக் பேப்பர்களையும் பயன்படுத்துகின்றனர். உடல் நலத்திற்கு கேடான இவற்றை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்காணித்து தடை செய்தால் வாழை இலைகளின் தேவை சற்று அதிகரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X