பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நடமாட்டம் குறைந்தது கடை வீதியில் வியாபாரம் 'டல்'

Added : மே 20, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் ஊரடங்கு ,கோடை வெயில் காரணமாக காலையிலேயே மக்கள் நடமாட்டம் குறைந்ததால் வியாபாரம் இன்றி கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று தடுப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து விக்கிரவாண்டி பகுதி நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் விக்கிரவாண்டி பேரூராட்சியில் கடைகளை அரசு அனுமதித்துள்ள நேரமான காலை 6:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருந்தது.நான்காவது ஊரடங்கின் போது, சில தளர்வுகளை அறிவித்தாலும் விக்கிரவாண்டியில் முன்பு போலவே கடைகள் திறக்கப்பட்டன.கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடிப்பதால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் தற்போது நிலவிவரும் கோடை வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க காலையிலேயே கடை வீதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், காலை 10:30 மணிக்குள் மக்கள் நடமாட்டம் குறைந்து விடுவதால் கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது.காய்கறி மற்றும் மளிகைக் கடை உட்பட அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டதால் வியாபாரம் வெகுவாக குறைந்தது. கிராமப்புறங்களுக்கு வேன்களில் சென்று வியாபாரம் செய்து வந்த அத்தியாவசிய பொருட்களின் வாகனங்களும் தற்போது குறைந்து போனது. கோடை வெயில் ஒருபுறம் இருக்க மக்கள் மத்தியில் கடந்த இரண்டு மாதங்களாக வேலைவாய்ப்பை இழந்து பண வருவாய் இல்லாமல் இருப்பதே மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X