மத்திய பிரதேச தொழிலாளர்கள்127 பேர் ரயிலில் அனுப்பி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய பிரதேச தொழிலாளர்கள்127 பேர் ரயிலில் அனுப்பி வைப்பு

Added : மே 20, 2020
Share
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் 127 பேர், ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்த மத்திய பிரதேச

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் 127 பேர், ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்த மத்திய பிரதேச மாநில தொழிலாளர்கள் நேற்று அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில், விழுப்புரம் பகுதியில் 36 பேர், திருவெண்ணெய்நல்லுாரில் 17 பேர், திண்டிவனத்தில் 74 பேர் என மொத்தம் 127 பேர் 4 பஸ்கள் மூலம் சேலம் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து மத்திய பிரதேசம் சென்ற சிறப்பு ரயிலில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.இப்பணியை கலால் உதவி ஆணையர் மோகன், கோட்ட கலால் அலுவலர் ஆனந்தகுமார், மண்டல துணை தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X