கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொந்த மாநிலம் செல்லும் ரயில்களின் விபரங்களை வெளியிட உத்தரவு

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம் செல்வதற்கு, ரயில்கள் புறப்படும் நேரத்தையும், அவர்கள் தங்குமிடம் பற்றிய விபரங்களையும், பொது தளத்தில் வெளியிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த, திலக்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன், அவர்களை தங்க வைப்பதற்கான இடங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். சென்னையில் இருந்து புறப்படும், ரயில்களின் கால அட்டவணையை ஒழுங்குபடுத்த, மாநில அரசும், ரயில்வே அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ''பதிவு செய்யப்பட்ட, 2.43 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், ஒரு லட்சத்துக்கும் மேல், அரசு செலவில், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சொந்த மாநிலம் செல்வதற்காக காத்திருப்பவர்கள், தங்குவதற்கான இடங்கள் பற்றிய தகவல்களை, பொது தளத்தில் வெளியிட, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப, சிறப்பு ரயில் வசதி வழங்க, ரயில்வே அமைச்சகம் தயாராக இருப்பதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் தெரிவித்தார். வெவ்வேறு மாநிலங்களுக்கான ரயில்கள் புறப்படும் நேரத்தை, ரயில்வே அமைச்சக இணையதளத்திலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னைக்கு நடைமுறை தீர்வு காண, அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சொந்த மாநிலங்களுக்கு செல்ல, அவர்களை ரயில்களில் ஏற்றி விட, தன்னார்வ அமைப்புகளும் உதவலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை, வரும், 26க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X