பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை முகாமில் விழிப்புணர்வு விளக்கம்

Added : மே 20, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் தனிமை முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் கல்லுாரியில், மகாராஷ்டிரா பகுதியிலிருந்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூருக்கு திரும்பிய தொழிலாளர்கள் 77 பேர் தனிமை முகாமில் தங்க

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் தனிமை முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் கல்லுாரியில், மகாராஷ்டிரா பகுதியிலிருந்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூருக்கு திரும்பிய தொழிலாளர்கள் 77 பேர் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு, மாவட்ட தொற்றா நோய் பிரிவு மருத்துவ அலுவலர் விவேகானந்தன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத் ஆகியோர் கொரோனா நோய் தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர்.முகாமில், சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற சுகாதார அவசியம் குறித்தும், முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு அரசு தேவையான வசதிகள் செய்து தரும். அது போல் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.டாக்டர் அபர்ணா, தாசில்தார் பார்த்திபன், தனி தாசில்தார் சிவா, பி.டி.ஓ.,க்கள் நந்தகோபாலகிருஷ்ணன், எழிலரசு, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர்கள் ரமணி, பாபு, மருந்தாளுனர் நந்தகுமார், செவிலியர்கள் ஜான் பெமிலியா, சங்கீதா, வி.ஏ.ஓ., இளந்திரையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X