சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில், 8,000ஐ தாண்டியது ; திருவள்ளூரை முந்தியது செங்கல்பட்டு

Added : மே 20, 2020
Share
Advertisement
சென்னை : சென்னையில் கொரோனாவால், 8,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில், 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுதும், 13 ஆயிரத்து, 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் நேற்று மட்டும், 11 ஆயிரத்து, 894 பரிசோதனைகள்

சென்னை : சென்னையில் கொரோனாவால், 8,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில், 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுதும், 13 ஆயிரத்து, 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் நேற்று மட்டும், 11 ஆயிரத்து, 894 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், 743 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த, 83 பேரும் அடங்குவர்.சென்னையில் மட்டும், 557 பேருக்கு, நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, 58 பேர்; திருவள்ளூர், 23 பேர்; காஞ்சிபுரம், 14 பேர், நேற்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை நடத்தப்பட்ட, 3.44 லட்சம் பரிசோதனைகளில், 13 ஆயிரத்து, 191 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில், 8,228 பேர் பாதிக்கப்பட்டு, 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில், மாநில அளவில், சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் வரை, இரண்டாம் இடத்தில் இருந்த, திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று குறைந்த அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டது.நேற்று, 58 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட, செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 621 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாநிலம் முழுதும் சிகிச்சை முடிந்து, நேற்று மட்டும், 987 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதையும் சேர்த்து இதுவரை, 5,882 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், திருவள்ளூரைச் சேர்ந்த, 44 வயது பெண், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சென்னையைச் சேர்ந்த, 52 வயது நபர், நேற்று உயிரிழந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 70 வயது மூதாட்டி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுவரை, கொரோனாவால், 87 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்புடன், 7,222 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அறிகுறியுடன், 5,059 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் / நேற்று முன்தினம் / நேற்று /குணம் அடைந்தோர் / இறப்புஅரியலுார் 355 355 345 0செங்கல்பட்டு 560 621 193 4சென்னை 7,671 8,228 2,823 59கோவை 146 146 144 1கடலுார் 420 420 381 1தர்மபுரி 5 5 4 0திண்டுக்கல் 126 127 106 1ஈரோடு 70 70 69 1கள்ளக்குறிச்சி 111 112 58 0காஞ்சிபுரம் 209 223 124 1கன்னியாகுமரி 49 49 20 1கரூர் 79 79 52 0கிருஷ்ணகிரி 20 21 18 0மதுரை 163 172 108 2நாகை 51 51 45 0நாமக்கல் 77 77 77 0நீலகிரி 14 14 12 0பெரம்பலுார் 139 139 91 0புதுக்கோட்டை 7 13 6 0ராமநாதபுரம் 39 39 21 1ராணிப்பேட்டை 84 84 58 0சேலம் 49 49 35 0சிவகங்கை 26 26 13 0தென்காசி 72 75 48 0தஞ்சாவூர் 75 76 66 0தேனி 89 92 44 1திருப்பத்துார் 29 29 22 0திருவள்ளூர் 571 594 191 8திருவண்ணாமலை 155 166 50 0திருவாரூர் 32 32 30 0துாத்துக்குடி 91 113 29 2திருநெல்வேலி 226 242 78 1திருப்பூர் 114 114 114 0திருச்சி 68 68 66 0வேலுார் 34 34 26 1விழுப்புரம் 311 318 278 2விருதுநகர் 55 61 37 0வெளிநாட்டில் இருந்து வந்தோர் 54 54 0 0ரயிலில் இருந்து வந்தோர் 2 3 0 0மொத்தம் 12,448 13,191 5,882 87

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X