சாய்தளத்தில் தடுப்பு கட்டைகள் மாற்றுத்திறனாளி அலுவலர்கள் அவதி| Dinamalar

சாய்தளத்தில் தடுப்பு கட்டைகள் மாற்றுத்திறனாளி அலுவலர்கள் அவதி

Added : மே 20, 2020
Share

விழுப்புரம்; சாய்தளத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதால், கலெக்டர் அலுவலக மாற்றுத்திறனாளி அலுவலர்கள் அவதியடைகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருமணம், மருத்துவம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்ல வாகன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக தரைதளம் பகுதியில் வாகன சீட்டு அனுமதி மையம் துவங்கப்பட்டுள்ளது.இங்கு வரும் நபர்கள் வரிசையில் காத்திருக்க, மாற்றுத்திறனாளிகள் சாய்தளம் பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டது. தற்போது கலெக்டர் அலுவலகத்தில் 50 சதவீத அரசு அலுவலர்கள் பணிக்கு வந்துள்ளனர்.இந்நிலையில், சாய்தளம் பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதால், கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் மாற்றுத்திறனாளி அலுவலர்கள் கடும் அவதியடைகின்றனர். சாய்தளம் அருகில் உள்ள படிக்கட்டு வழியாக மாற்றுத்திறனாளிகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாய்தளம் பகுதியில் உள்ள தடுப்பு கட்டைகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X