திருவாடானை:செம்மரக்கட்டை கடத்தல்காரர்களுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசங்கிலிமடம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 37 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டன.இருவரை பிடித்த போலீசார் ராமநாதபுரத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
இவ்வழக்கு குறித்து விசாரிக்க வருண்குமார் எஸ்.பி., அவசர குற்றப்பிரிவு(சீரியஸ் கிரைம்) எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்தார். இவர்கள் சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்று விசாரணை செய்ததில் ெஹராயின் உள்ளிட்ட போதை பொருள் கடத்தல்கும்பலுடன் செம்மரக்கட்டை கடத்தியவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததால் தனிப்படையினர் சென்னை சென்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE