கேரள எல்லையில் சிக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரள எல்லையில் சிக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள்

Added : மே 20, 2020
Share
கோவை:கொரோனா காரணமாக கேரள எல்லையில், கெடுபிடி அதிகமாக உள்ளதால், ஆனைகட்டி பள்ளியில் படிக்கும் கேரள வாழ் தமிழ் மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் தவிக்கின்றனர்.கோவை ஆனைகட்டி பகுதியிலுள்ள பள்ளியில், அட்டப்பாடி பகுதியை சேர்ந்த மாணவர்கள், 21 பேர் பத்தாம் வகுப்பும், 15 பேர் பிளஸ் 1 வகுப்பும் படிக்கின்றனர்.அட்டப்பாடி, கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. ஊரடங்கு

கோவை:கொரோனா காரணமாக கேரள எல்லையில், கெடுபிடி அதிகமாக உள்ளதால், ஆனைகட்டி பள்ளியில் படிக்கும் கேரள வாழ் தமிழ் மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் தவிக்கின்றனர்.கோவை ஆனைகட்டி பகுதியிலுள்ள பள்ளியில், அட்டப்பாடி பகுதியை சேர்ந்த மாணவர்கள், 21 பேர் பத்தாம் வகுப்பும், 15 பேர் பிளஸ் 1 வகுப்பும் படிக்கின்றனர்.அட்டப்பாடி, கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக மாணவர்கள் தேர்வு எழுத தமிழக பகுதிக்கு வருவதில், பல்வேறு சிரமங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பிற மாவட்டங்களில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு, இ-பாஸ் வழங்கி, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என, மாநில அரசு அறிவித்துள்ளது.ஆனால், அட்டப்பாடி பகுதியில் இருந்து, ஆனைகட்டி வழியாக நேரடியாக தமிழகம் வர, 6 கி.மீ பயணம் செய்தால் போதுமானது.ஆனால், கேரள எல்லை பகுதியில் அனுமதி மறுப்பதால், பாலக்காடு வழியாக மாணவர்கள், 180 கி.மீ., சுற்றி வந்து, தேர்வு எழுத வேண்டிய நிலை எழுந்துள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், இவ்வாறு வந்து செல்ல முடியாது.
இம்மாணவர்கள், எவ்வித மனஅழுத்தமும் இன்றி, தேர்வுகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.'கேரளாவிடம் பேசிஅனுமதி வாங்கியாச்சு'இது குறித்து, கலெக்டர் ராஜாமணியிடம் கேட்டபோது, ''அட்டப்பாடி மாணவர்களின் தேர்வு பிரச்னை, என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பாலக்காடு மாவட்ட கலெக்டரிடம் பேசி, உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இப்பகுதி மட்டுமின்றி, பிற எல்லை பகுதிகளில் உள்ள மாணவர்கள் யாராயினும், தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுக்கு முன், இதற்காக பிரத்யேக போன் எண் வெளியிடப்படும். தற்போது, இதுசார்ந்த சிக்கல் இருப்பவர்கள், 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X