புகையிலைப் பொருட்கள் பறிமுதல்| Dinamalar

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

Added : மே 20, 2020
Share
கோவை ஆர்.ஜி., வீதியில் போலீசார் நடத்திய சோதனையில், மகாலட்சுமி என்டர்பிரைசஸ் என்ற கடையில், புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக, கோவை சொக்கம்புதுார் ரோடு கோவிந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த திலிப்குமாரை, 26 கைது செய்தனர். இவரிடமிருந்து, 76 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.மது விற்றவர்கள் கைதுகோவையின்

கோவை ஆர்.ஜி., வீதியில் போலீசார் நடத்திய சோதனையில், மகாலட்சுமி என்டர்பிரைசஸ் என்ற கடையில், புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக, கோவை சொக்கம்புதுார் ரோடு கோவிந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த திலிப்குமாரை, 26 கைது செய்தனர். இவரிடமிருந்து, 76 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.மது விற்றவர்கள் கைதுகோவையின் பல்வேறு பகுதிகளிலும், சட்ட விரோத மது விற்பனை நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பீளமேடு, ராமநாதபுரம், சரவணம்பட்டி, புலியகுளம், சிட்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, நான்கு பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 36 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X