பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளலூரில் பஸ் ஸ்டாண்ட் பணி: டிச.,க்குள் முடிக்க கமிஷனர் உத்தரவு

Added : மே 20, 2020
Share
Advertisement

கோவை:வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை, நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், வரும் டிச., மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, அனைத்து ஸ்மார்ட் சிட்டி பணிகளும் தடைபட்டன. தற்சமயம் நோய் கட்டுக்குள் இருப்பதாலும், ஊரடங்கை தளர்த்தியிருப்பதாலும், கட்டுமான பணிகளை தொடர, மத்திய - மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
இதன்படி, வேகமெடுத்துள்ள வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, கோவைப்புதுாரில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பு, உக்கடம் பெரிய குளம் நிரம்பினால், உபரி நீர் வழிந்தோடி, நொய்யல் ஆற்றில் கலப்பதற்கு கட்டமைப்பு, கிருஷ்ணாம்பதி குளத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் உள்ளிட்டவற்றை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.இரண்டு மாதங்கள் பணிகள் முடங்கியதால், இனி விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை, டிச., - ஜன.,க்குள் முடிக்க வேண்டும். மற்ற பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள், முடிக்கும் வகையில் வேகப்படுத்த வேண்டுமென, கமிஷனர் அறிவுறுத்தினார்.நகர பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X