டூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள்கலெக்டர் அலுவலகத்தில் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள்கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : மே 20, 2020
Share

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.விழுப்புரம் டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு:விழுப்புரம் மாவட்டத்தில் ரூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வாகனங்கள் இயக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு வரியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.எங்களின் வாகன காப்பீட்டில் உள்ள மாநில, மத்திய அரசின் ஜி.எஸ்.டி.,யான 5000 ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அடிப்படையில் வாகனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழகத்திலும் இந்த பர்மிட்டை வழங்கி வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X