போத்தனூர்:குனியமுத்தூர், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன்களில், மூன்று ஷிப்ட் முறை மாற்றப்பட்டதால், போலீசார் மனக்குமுறலில் உள்ளனர்.போலீசாரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், மூன்று ஷிப்ட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்த நடைமுறையில், நான்கில் மூன்று பங்கு போலீசார் பணியில் இருப்பர். ஒரு பங்கு போலீசார் ஏழு நாட்கள் விடுமுறையில் இருப்பர்.இவர்கள் பணிக்கு வரும் போது, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு இல்லாதோர் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்படுவர்.
இது ஒரு சுழற்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த, 6 போலீசார் பாதிக்கப்பட்டனர்.உடன் பணியாற்றியவர்களுக்கு, தனிமைப்படுத்தல் கடைபிடிக்கப்படவில்லை. போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டன. போலீசாரின் பலத்த கண்காணிப்பால், தொற்று பரவாமல் தவிர்க்கப்பட்டது.இத்தகைய சூழலில், இவ்விரு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிவோர் வழக்கம் போல, இரண்டு ஷிப்ட் முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏழு நாள் விடுமுறையும் தரப்படுவதில்லை.மற்ற ஸ்டேஷன்களில், மூன்று ஷிப்ட் முறை நடைமுறையில் உள்ள நிலையில், இவ்விரு ஸ்டேஷன்களிலும் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது, போலீசாரிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது.அதிகாரிகள் கவனிப்பார்களா? இவ்விரு போலீஸ் ஸ்டேஷன்களில், பணிபுரிவோர் வழக்கம் போல, இரண்டு ஷிப்ட் முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏழு நாள் விடுமுறையும் தரப்படுவதில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE