முன்விரோத தகராறு இரண்டு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு இரண்டு பேர் கைது

Added : மே 20, 2020
Share

கச்சிராயபாளையம்; கரடிசித்துார் கிராமத்தில் முன் விரோத தகராறில் கடை உரிமையாளரைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ, 41; இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த 16ம் தேதி மாலை இளங்கோ தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த ரவி தனது ஆதரவாளர்களுடன் இளங்கோவை தாக்கினார்.இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார், தேவா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து ரவி, 42; வள்ளி, 36; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X