மணல் கடத்திய 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய 2 பேர் கைது

Added : மே 21, 2020
Share

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் இருந்து செல்லும் காவேரி சந்து வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த சந்தப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் எழிலரசன், 25; லட்சுமணன் மகன் பழனிவேல், 30; ஆகியோரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X