ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுவிப்பு

Added : மே 21, 2020
Share

அன்னுார்:சோதனைச் சாவடி பணியிலிருந்து, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர்.அன்னுார் ஒன்றியத்தில், கோவை திருப்பூர் மாவட்ட எல்லையான கஞ்சப்பள்ளி பிரிவிலும், கோவை ஈரோடு மாவட்ட எல்லையான செல்லப்பம்பாளையத்திலும், சோதனைச் சாவடிகள் உள்ளன.15 நாட்களுக்கு முன், இந்த சோதனைச் சாவடிகளில், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு, பணி வழங்கப்பட்டது.தினமும், இரு சாவடிகளிலும், தலா ஆறு பேர் வீதம், 12 பேர், 8 மணி நேரம் பணியில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.14 நாட்களாக சோதனை சாவடியில், பணி செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், அவர்கள் விடுவிக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X