சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசியில் சரக்கு கேட்ட தகராறுவிழுப்புரத்தில் இருவர் கைது

Added : மே 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்: ஓசியில் சரக்கு கேட்ட தகராறில், பார் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி, 43; இவருக்கும், மரகதபுரத்தைச் சேர்ந்த பழனிவேல், 39; என்பவருக்கும் ஜானகிபுரம் டாஸ்மாக் கடை பார் ஏலம் எடுப்பதில் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில், பழனிவேல் மற்றும் கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த சாரதி, 45; ஆகியோர் கடந்த 17ம் தேதி பணம் கொடுக்காமல் அருள்ஜோதியிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர். அதற்கு அருள்ஜோதி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பழனிவேல், சாரதி இருவரும் பார் கொட்டகையை தீ வைத்து கொளுத்தியும், அருள்ஜோதி ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து பழனிவேல், சாரதியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X