பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த பணத்தில் பயணித்த வடமாநில தொழிலாளர்கள்

Added : மே 21, 2020
Share
Advertisement
அன்னூர்:அன்னூர் தாலுகாவிலிருந்து, 300க்கும் மேற்பட்ட, வடமாநில தொழிலாளர்கள் சொந்த செலவில், சொந்த ஊருக்கு, பஸ்களில் புறப்பட்டுச் சென்றனர்.கோவை மாவட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அரசின் கட்டணமில்லா ரயில்களில், அனுமதி கிடைப்பது தாமதமாகி வருகிறது.பொறுமை இழந்த, 300க்கும் மேற்பட்ட அன்னூர் தாலுகா தொழிலாளர்கள்,

அன்னூர்:அன்னூர் தாலுகாவிலிருந்து, 300க்கும் மேற்பட்ட, வடமாநில தொழிலாளர்கள் சொந்த செலவில், சொந்த ஊருக்கு, பஸ்களில் புறப்பட்டுச் சென்றனர்.கோவை மாவட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அரசின் கட்டணமில்லா ரயில்களில், அனுமதி கிடைப்பது தாமதமாகி வருகிறது.பொறுமை இழந்த, 300க்கும் மேற்பட்ட அன்னூர் தாலுகா தொழிலாளர்கள், சொந்த செலவில் பஸ் ஏற்பாடு செய்து, தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.நேற்று முன்தினம் இரவு செல்லனூர் நிறுவனத்திலிருந்து, 30 பேர், தனி பஸ்சில், ஒடிசா புறப்பட்டுச் சென்றனர். கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், நாரணாபுரம், குப்பேபாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த நான்கு நாட்களில், தங்கள் சொந்த செலவிலும், சிலர் தங்கள் நிறுவனத்தின் உதவி பெற்றும், பஸ் பேசி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X