பொது செய்தி

தமிழ்நாடு

107 விபத்து வழக்குகள்; ரூ.3.35 கோடி இழப்பீடு

Added : மே 21, 2020
Share
Advertisement
கோவை:107 விபத்து வழக்குகளில், மூன்று கோடியே 35 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை, பட்டுவாடா செய்யப்பட்டது.மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு கோரும் வழக்குகள், கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட் மற்றும்கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு பிறகு, இன்சூரன்ஸ்நிறுவனங்களிடம் பணம் பெற்று,

கோவை:107 விபத்து வழக்குகளில், மூன்று கோடியே 35 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை, பட்டுவாடா செய்யப்பட்டது.மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு கோரும் வழக்குகள், கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட் மற்றும்கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு பிறகு, இன்சூரன்ஸ்நிறுவனங்களிடம் பணம் பெற்று, பாதிக்கப்பட்டவர்களின்வங்கி கணக்கில், நீதிமன்றத்தால் இழப்பீடு தொகை செலுத்தப்படுகிறது.ஊரடங்கு காரணமாக, கோவையில் நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு தொகை கொடுத்த பிறகும், ஊரடங்கை காரணம் காட்டி, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில், தொகை செலுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.இழப்பீடு பணம் கிடப்பில் போடப்பட்டதால், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மாவட்ட நீதிபதியின் கவனத்துக்கு, இத்தகவலை வக்கீல் சங்கம் எடுத்து சென்றது. இழப்பீடுதொகையை பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் செலுத்த, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, 107 வழக்கில், மொத்தம் மூன்று கோடியே 35 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X