மஞ்சள் நிறத்தில் வாழை; விவசாயிகள் கவலை

Added : மே 21, 2020
Share
Advertisement
 மஞ்சள் நிறத்தில் வாழை; விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம்:வாழை மரங்கள் மஞ்சள் நிறமாக மாறி, கருகி வருவதால், வாழை விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள், நிலத்தை ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு ஊராட்சி பகுதிகளில், நேந்திரன், ரோபஸ்டா ஆகிய வாழைகள் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.நேந்திரன் வாழை இலைகள் தற்போது, மஞ்சள் நிறத்தில் மாறியும், பல இடங்களில் இலைகள் கருகியும் வருகின்றன. இதைப்பார்த்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முத்துக்கல்லூர் விவசாயி தேவராஜ் கூறுகையில், ''வாழைகள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கான காரணம் குறித்து, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து விளக்க வேண்டும்,'' என்றார்.இது குறித்து, மேட்டுப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் சீனிராஜ் கூறுகையில், ''சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பூமியில், வெயில்காலத்தில் வாழை மரங்கள் இப்படித்தான், மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்து போகும். இந்த பூமியில் தழை சத்து, குறைவாக உள்ளதால், போடும் அனைத்து உரத்தையும், சுண்ணாம்பு கற்கள் எடுத்துக்கொள்ளும். இதனால் வாழைக்கு தழைச்சத்து கிடைக்காததால், மஞ்சள் நிறமாக மாறுகின்றன,'' என்றார்.இதுதான் தீர்வு விவசாயிகளே!''பசுந்தாள் செடிகளை, ஊடு பயிராக பயிர் செய்து, அதை அப்படியே மண்ணில் மக்கச் செய்ய வேண்டும். அப்போது வாழைக்கு நல்ல உரம் கிடைக்கும். இது மாதிரியான பூமியின் மண்ணை பரிசோதனை செய்து, அதற்கு தகுந்த முறையில் உரம் இட வேண்டும்,'' என்றார் உதவி இயக்குனர் சீனிராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X