மின்சாரம் தாக்கி ஒயர்மேன் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒயர்மேன் படுகாயம்

Added : மே 21, 2020
Share

மயிலம்; மயிலம் அடுத்த பாதிராப்புலியூரில் மின் மாற்றியை சீர் செய்த ஒயர் மேன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.மயிலம் அடுத்த வீடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள், 45; செண்டூர் துணை மின் நிலையத்தில் ஒயர்மேனாக உள்ளார். கடந்த 18ம் தேதி வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட அவர், மாலை பாதிராப்புலியூர் பகுதியில் பழுதான மின்மாற்றியை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார்அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிவபெருமாள் மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X