ஊரடங்கு அமல்படுத்தும் முறையை கண்காணிக்கும் உள்துறை அமைச்சகம்| Dinamalar

ஊரடங்கு அமல்படுத்தும் முறையை கண்காணிக்கும் உள்துறை அமைச்சகம்

Added : மே 21, 2020
Share

புதுடில்லி : “இந்த நான்காம் கட்ட ஊரடங்கில், உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை, மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய உள்துறை அமைச்சகமும் கண்காணித்து வருகிறது,” என, உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் புண்யா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுதும், நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் புண்யா சலீலா ஸ்ரீவஸ்தவா, நேற்று கூறியதாவது:மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, வரும், 31 வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய உத்தரவுகளும் வெளியிடப் பட்டுள்ளன.மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், அங்குள்ள சூழலை கருத்தில்கொண்டு, வழிமுறைகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதையும், அதனால் ஏற்படும் முன்னேற்றங்களையும், மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய உள்துறை அமைச்சகமும் கண்காணித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, வைரஸ் பாதிப்புகள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறியதாவது: நாட்டில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, 61 ஆயிரத்து, 149 ஆக உள்ளது. 42 ஆயிரத்து, 298 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம், ஊரடங்கின் துவக்கத்தில், 7.1 ஆக இருந்த குணமடைந்தோரின் விகிதம், 39.62 ஆக உயர்ந்துள்ளது.சிகிச்சை பெற்று வருவோரில், 6.39 பேர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இதில், 2.94 சதவீதம் பேர், ஆக்ஸிஜன் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்; 3 சதவீதம் பேருக்கு, அவசர சிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; 0.45 பேருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X