பொது செய்தி

தமிழ்நாடு

காய்ச்சல், மூச்சுத்திணறலுக்கு சிறப்பு வார்டுகள்

Added : மே 21, 2020
Share
Advertisement

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், காய்ச்சல், மூச்சு திணறலுக்கு தனித்தனியாக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா அச்சம் காரணமாக, கோவை அரசு மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா நோயாளிகளை கண்டறிய, காய்ச்சல், இருமல் பாதிப்புகளுடன் வருவோருக்கு, தனியாக சிகிச்சை அளிக்க, 24 மணி நேரமும் செயல்படும், சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
'ஐ.எல்.ஐ.,' என்ற இந்த வார்டில், காய்ச்சல், இருமல், சளி, உடல்வலி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது.மூச்சுத்திணறல் பாதிப்புடன் வருவோருக்கு, எஸ்.ஆர்.ஐ.,என்ற வார்டில், சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வார்டுகள் வாயிலாக, தினமும் சுமார் 100 பேர் வரை, சிகிச்சை அளிக்கப்படுகிறது.மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், ''அரசின் அறிவுறுத்தலின்படி, இந்த வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஐ.எல்.ஐ.,வார்டில், மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்து மருந்து வழங்கப்படுகிறது. சிகிச்சை அளிக்க 'ஷிப்ட்' அடிப்படையில், சிறப்பு மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X