பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள ஐதராபாத் பயணிகள் ஆறு பேர்

Added : மே 21, 2020
Share
Advertisement

கோவை:ஐதராபாத்தில் இருந்து நேற்று கோவை வந்த, 6 பேர் சுகாதார துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.கோவையில், கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதனால், கேரளா, டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கோவைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று ஐதராபாத்தில் இருந்து, 3 ஆண்கள், 3 பெண்கள் கோவை வந்தனர். பிரத்யேக கொரோனா கண்காணிப்பு மையத்தில், தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, சுகாதார துறை சார்பில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:கோவையில், கடந்த 17 நாட்களாக புதிதாக யாருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர், தீவிரமாக கண்காணிக்கப் படுகின்றனர்.நேற்று முன்தினம், மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த, 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.புதிதாக, 8 பேர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவ மனையிலும், கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X