பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பில் 300 வீடுகளுக்கு ஒரு குழு

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : 'சென்னையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், 2,500 தன்னார்வ களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னை மாநகராட்சியில், குறிப்பிட்ட, 30 வார்டுகளில் மட்டுமே தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. மற்ற பகுதிகளில் குறைந்த அளவிலேயே, வைரஸ் தொற்று உள்ளது. பாதிப்பு உள்ள பகுதிகளில், தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு உள்ளன. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில், மாநகராட்சியுடன் இணைந்து, தன்னார்வ நிறுவனங்கள் ஈடுபட உள்ளன. இதற்காக, 100 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
கண்காணிப்பு : இந்த குழுக்களில், மொத்தம், 2,500 களப் பணியாளர்களும், 15 களப் பணியாளர்களுக்கு ஒருவர் என, 166 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். குழுவிற்கு ஒருவர் என, 100 குழுக்களுக்கு, 100 திட்ட பணி மேலாளரும், 100 தகவல் மேலாளரும் நியமிக்கப்பட உள்ளனர்.களப் பணியாளர்கள், சென்னையில் உள்ள, 1,979 குடிசை பகுதிகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவர். ஒரு குழுவினர், 300 வீடுகளை கண்காணிப்பர். ஒவ்வொரு பகுதியிலும், மக்கள் உணவு, மளிகை பொருட்கள், குடிநீர், பொது கழிப்பிடம் போன்ற காரணங்களுக்காக, வெளியே சென்று வருவதை கண்காணித்து, அந்த இடத்தில் கூட்டம் கூடாமல், சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்துவர்.

விழிப்புணர்வுமேலும், வீட்டில் உள்ளவர்களின் வயது, பாலினம், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சேகரித்து, எளிதில் நோய்வாய்படக்கூடிய, 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், நாள்பட்ட நோயாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி புரிவர்.தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில், பொது மக்கள் சரியான நடைமுறையை பின்பற்றுகின்றனரா என, கண்காணிப்பதுடன், அவர்களுக்கு தேவையான முக கவசம், கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வர்.மேலும், அப்பகுதியில் அறிமுகமான நபர்களை, களப் பணியாளர்கள் தொடர்பு கொண்டு, அவர்கள் வாயிலாக, துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் வீடியோ வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.

பொது மக்களோடு களப் பணியாளர்கள் தொடர்பில் இருப்பதால், நோய் தொற்று ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவைப்படின் பரிசோதனை செய்யப்படும். இந்த களப் பணியாளர்கள், வரும், 24ம் தேதி முதல், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X