பயங்கரவாதிகள் தாக்குதல் இரு வீரர்கள் உயிரிழப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர், நேற்று பலியாகினர்.

ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின், பந்தாச் பகுதியில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் இருவர், வீரர்களை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில் காயம் அடைந்த, 35 மற்றும், 36 வயது வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.இதற்கிடையே, புட்காம் மாவட்டத்தில், லஷ்கர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர், நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை கைபற்றப்பட்டன. இவர்கள், லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு, ஆதரவாக செயல்பட்டு வந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வடக்கு படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, ஜம்மு - காஷ்மீர் கவர்னர், ஜி.சி.முர்முவை, கவர்னர் மாளிகையில் நேற்று சந்தித்தார். அப்போது, எல்லைப் பகுதியின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து, கவர்னரிடம் அவர் விரிவாக விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X