மாநிலங்களுக்கு ரூ.15,340 கோடி ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டது

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுடில்லி : மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, 15 ஆயிரத்து, 340 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

கடந்த, 2017, ஜூலை,1ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, கடந்த, 2019 - 20ம் நிதியாண்டில், நவம்பர் வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு, 2020 - 21ம் நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 15 ஆயிரத்து, 340 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து தொழில்களும் முடங்கிஉள்ளதால், ஜி.எஸ்.டி., வருவாய் குறைந்துள்ளது. இருப்பினும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி நெருக்கடியை கருதி, ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X