காசோலை இல்லாமல் பணப் பரிமாற்றம் பாதிப்பு| Dinamalar

காசோலை இல்லாமல் பணப் பரிமாற்றம் பாதிப்பு

Added : மே 21, 2020
Share

திருப்புத்துார்:திருப்புத்துார் பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள், அரசு அலுவலகங்களில் அவர்கள் கணக்கு வைத்துள்ளவங்கிகளின் காசோலை கிடைக்காமல் தற்காலிக பணியாளர் சம்பளம், ஒப்பந்ததாரர் பில், அன்றாட செலவு உள்ளிட்ட வகைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.

பெரும்பாலும் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துஉள்ளனர். அங்குகணக்கு வைத்து இருப்பவர்களுக்கு காசோலை தேவைப்படுபவர்களுக்கு தபாலில் நேரடியாகஅனுப்பப்படும். காசோலையில் கணக்காளர் விபரம் அச்சிடுதல்,ஊரடங்கால் தபால், கூரியர் முழுமையாக செயல்படாதது உள்ளிட்ட காரணங்களால் காசோலை அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

வேறு சில வங்கிகளில் தற்காலிகமாக சில காசோலைகளை கொடுத்து சமாளிக்கின்றனர். இருப்பினும் முழுமையாக காசோலைகள் அச்சிடப்பட்டு, வந்து சேர சில வாரங்களாகும் என்று கூறப்படுகிறது. இதனைத் தவிர்க்க 'ஆன் லைன்' மூலம்பண பரிமாற்றம் செய்ய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயனாளிகள் கோரியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X