இயற்கை கற்றுக் கொடுக்கும் பாரம்பரிய பாடம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
இன்றைய சூழலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் தான். முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், உணவு, வைத்தியம், பாதுகாப்பு முறைகள் சடங்குகளை உற்று நோக்கினால் ஒவ்வொன்றிலும் ஒரு அறிவியல் கலந்த அர்த்தம் இருக்கும். இப்படிப்பட்ட பாதுகாப்பு விஷயங்களை எதிர் காலங்களில் நம் சந்ததியினருக்கு கற்று கொடுக்க வேண்டிய சூழலில்
இயற்கை கற்றுக் கொடுக்கும் பாரம்பரிய பாடம்

இன்றைய சூழலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் தான். முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், உணவு, வைத்தியம், பாதுகாப்பு முறைகள் சடங்குகளை உற்று நோக்கினால் ஒவ்வொன்றிலும் ஒரு அறிவியல் கலந்த அர்த்தம் இருக்கும். இப்படிப்பட்ட பாதுகாப்பு விஷயங்களை எதிர் காலங்களில் நம் சந்ததியினருக்கு கற்று கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.


இயற்கை எதிர்ப்பு சக்திஇறைவன் படைப்பில் இயற்கையாகவே நம் உடல் எதிர்ப்பு சக்தியை தனக்கு தானே ஏற்படுத்தி கொள்ளும். கொரோனா வைரஸின் தாக்கத்தை நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி எதிர்க்கும் போது உடல் வெப்பம் அதிகமாகி காய்ச்சலாக வெளிப்படுகிறது.எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இயற்கை தன்னை தானே புதுப்பித்து கொள்ளும். 'மண்ணிலே பிறந்தது மீண்டும் மண்ணிலே' என்று கூறுவர். மண்ணிலிருந்து உருவான புல், பூண்டு அதிலிருந்து ஆடு, மாடு, கோழி மற்றும் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மீண்டும் மண்ணில் போவது இயற்கையின் நியதி.


பஞ்ச பூதங்கள் தரும் ஆற்றல்இயற்கையின் முக்கியமான பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இல்லை என்றால் நாம் இல்லை. இதை ஒன்றியே நாம் வாழ வேண்டும் என்கின்ற வகையில் இவை அனைத்தையும் கடவுளின் மறு உருவமாக முன்னோர்கள் பார்த்தனர். மலை பகுதிகளை கிரிவலம் என பவுர்ணமி அன்று சுற்றி வந்தனர். இந்த நாட்களில் மலையில் இருக்க கூடிய தாவரங்கள், மூலிகை, உயிர் ஆற்றல் உள்ள ஜீவ சமாதிகள், சித்தர்களின் சக்திகள் மூலம் நமக்குள் ஆற்றல் கிடைக்கும்.விலங்குகளை கொல்லக்கூடாது, உண்ணக்கூடாது என்கிற வகையில் பாம்பு, பல்லி உட்பட்ட அனைத்து உயிர்களையும் கடவுளாக பார்த்தனர் (சீனர்கள் உயிரினங்களை கடவுளாக பார்க்காததால் அதை சாப்பிட்டு கொரோனாவை பரப்பியுள்ளனர்).காக்கை, குருவி, அணில்கள் மரம், செடி, கொடிகளின் விதைகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று விருட்சமாக வளர விதை பரப்பும் காரணிகளாக இருக்கின்றன. எனவே, நம் முன்னோர்கள் காக்கையை சனி பகவானாகவும், அணிலை ராமனுக்கு நண்பனாகவும் பாவித்தனர் .


வீட்டை சுற்றி மஞ்சள் நீர்அதே போல் முன்னோர்கள் பழைய சோறு, வெங்காயம் என சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தனர். யோகா, மூச்சு பயிற்சி, தியானம் கலைகளை பல நாடுகள் பள்ளி பாடங்களாக வைத்துள்ளன. ஆனால், நாமோ பாரம்பரிய கலாசாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி பீட்சா, பர்கர் என உணவு பழக்கமும் நியூ டெக்னாலஜி, அப்டேட் என வாகனங்களை பெருக்கி தண்ணீர் இல்லாத உலகத்தையும் உருவாக்கி வருகிறோம்.கொரோனா ஊரடங்கில் கழிவு கலக்காத தெளிந்த நீரை பார்க்கிறோம். பறவைகள், விலங்குகள் சுதந்திரமாக திரிகின்றன. இயற்கை புத்தம் புது பூமியில் இருப்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. காலை எழுந்ததும் வேப்பம் குச்சியில் பல் துலக்கி, அதன் கொழுந்தை சாப்பிட்டதாக நண்பர் ஒருவர் கூறினார். அதே நேரம் காலை இஞ்சி சாறு, மாலை சுக்கு மல்லி காபி, இரவு மிளகு மஞ்சள் கலந்த பால் அருந்துவதாகவும் உணவில் புதினா, பூண்டு, கீரைகள் சேர்ப்பது, வேப்ப இலைகளை வீட்டு வாசலில் கட்டுவது, தினமும் வீட்டை சுற்றி மஞ்சள் நீர் தெளிப்பது என்று பல வீடுகளில் பழைய பழக்கவழக்கங்கள் திரும்பி வந்துள்ளன.முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், வைத்திய முறைகள், அதற்கு பயன்படுத்திய மூலிகைகளை கேட்டால் ஆச்சரியப்பட வைத்தது, இப்போது நாமும் பயன்படுத்த தோன்றுகிறது.


மாதங்களின் அடிப்படையில்பூமி தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாளை 'சித்திரை 1 என்றும், அதை தமிழ் புத்தாண்டாகவும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒரு புள்ளியில் நிற்கும் நாளை ஆடி பிறப்பாகவும். மீண்டும் சூரியன் தென்கிழக்கு நோக்கி வரும் நாளை தீபாவளியாகவும், தென் கிழக்கு நோக்கி நகரும் போது தை பொங்கலாகவும் வகைப்படுத்தி திருவிழாக்களாக கொண்டாடினர்.

ஆலயமும் அறிவியலும்

புரட்டாசி வெயிலின் தாக்கம் பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும் அந்த நாட்களில் நமது செரிமானம் குறைவு. எனவே அந்த மாதங்களில் அசைவ உணவை உட்கொள்ளக்கூடாது. மேலும் பெருமாள் கோவிலுக்கு சென்று பிரகாரத்தை மூன்று சுற்று சுற்றி (வாக்கிங் செல்லச் சொன்னால் கேட்க மாட்டார்கள்) கடவுளை இருகரம் கொண்டு நமஸ்காரம் செய்யும் போது, சூரிய சக்தி கும்பத்தின் வழி நேர் கோட்டில் விக்ரகத்தில் வரும் போது அதன் சக்தியை உணரமுடியும். தீபாராதனை செய்த தீபத்தை கை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் போது அதிலிருந்து வரும் வாயு கையில் பட்டு கை சுத்தமாகிறது.


காப்பு விதிமுறைகள்நம் முன்னோர்கள் சில முக்கிய விதிகளை கடைபிடித்தனர். வெளியே சென்று வந்தால் மிதியடிகளை வெளியே கழற்றிவிட்டு கை, கால் அலம்புவது, பிறப்பு, இறப்பு வீட்டிற்கு சென்று வந்தால் குளித்த பின் வீட்டுற்குள் செல்லும் வழக்கம் இருந்தது. இதற்காக வீட்டிற்கு வெளியே குளியலறை கட்டினர். யாருக்காவது அம்மை வந்தால் வேப்பங் கொத்தை வாசலில் கட்டியும், அம்மை போட்டவரை வேப்ப இலையில் படுக்க வைப்பதும் வழக்கம். அப்போது அந்நியர்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிப்பது இல்லை. முன்னோர்கள் அன்றே சமூக இடைவெளியை பின்பற்றியது வியப்பாக உள்ளது.


பூகோள சாஸ்திரம்பிறந்த நேரத்தை கணக்கில் கொண்டு கோள்காளின் அமைப்பு மூலம் உடற்கூறுகளை கணித்தனர். ஏழாம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தர் தன் கோளறு பதிகம் நான்காம் பாடலில்'மதிநுதல் மங்கையோடு வடபால் ↔இருந்துமறையோதும் எங்கள் பரமன்நதியொடு கொன்றைமாலை முடி↔மேல் அணிந்தென்உளமே புகுந்த அதனால்கொதியுறு காலன்அங்கி நமனோடு↔துாதர்கொடு நோய்களான பலவும்அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே'என்று பாடியுள்ளார்.இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே கிடைக்கும். கொடிய நோய்கள் வருத்தாது என்பது பொருள். இந்த மந்திரத்தை தினந்தோறும் படித்தால் துன்பங்கள் நீங்கும்.


பாரம்பரிய மருத்துவம்பாட்டி வைத்தியம் இப்போதும் நம்மை பாதுகாக்கிறது. இஞ்சியை தேனுடன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஜலதோஷம், காய்ச்சல், வாயு தொல்லை, வாந்தி, வயிற்று புண் சரியாக மிளகை சாப்பிடலாம். மஞ்சளில் 'குர்குமின்' வேதிப்பொருள் இருப்பதால் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி. சமையலில், நிறம், சுவை கொடுக்கும். வயிறு தொடர்பான நோய்கள், இறைச்சி 'என்சைம்' கெட்டு போகாமல் இருக்க மஞ்சள் பயன்படுகிறது. துளசியின் இலை, காம்பு, வேர் மருத்துவ குணம் உள்ளவை. காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் ஆஸ்துமா, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு துளசி மருந்தாக பயன்படுகிறது. சுக்கு கருப்பட்டியில் மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சி குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.


வாஸ்து சாஸ்திரம்வழிப்போக்கர் இளைப்பாற திண்ணை, சூரிய ஒளி வீட்டிற்குள் வர கிழக்கு மற்றும் வடக்கு வாசல் அமைப்பு, சூரிய ஒளி விழ கிழக்கில் சமையலறை வைப்பது, மழைநீர் சேகரிக்க வீட்டு நடுவில் முற்றவெளி வைப்பது, தென்மேற்கில் தனி அறையும், தண்ணீர் தொட்டி, வாயு மூலையில் கழிவறை என முன்னோர்கள் அறியியல்பூர்வமாக வீடு கட்டினர். அவற்றைநாம் மீண்டும் பின்பற்ற துவங்க வேண்டும்.-ஜெ. வெங்கட்ராமன்பொறியாளர், மதுரை98948 81771

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X