பொது செய்தி

தமிழ்நாடு

காசநோய் கண்டறியும் நடமாடும் வாகன சேவை: மாவட்டத்தில் நேற்று முதல் துவங்கியது

Added : மே 21, 2020
Share
Advertisement
 காசநோய் கண்டறியும் நடமாடும் வாகன சேவை: மாவட்டத்தில் நேற்று முதல் துவங்கியது

திருப்பூர்;இலவச காசநோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகன சேவை, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது; தொடர்ந்து ஒரு மாத காலம் பரிசோதனை முகாம் நடக்க உள்ளது.திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தில், காசநோய் கண்டறியும் வாகனம், மாநிலம் முழுவதும் இயங்கி வருகிறது.
தமிழக அளவில், இலவச எக்ஸ்ரே பரிசோதனை வாகனம் இயக்கப்படுகிறது. மாவட்டம் தோறும், சுழற்சி முறையில், இயக்கப்பட்டு வருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று துவங்கி, ஜூன், 30ம் தேதி வரை, நடமாடும் காசநோய் கண்டறியும் முகாம் நடக்க உள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் விஜயகார்த்திகேயன் நடமாடும் காசநோய் கண்டறியும் வாகன பயணத்தை துவக்கி வைத்தார்.அரசு மருத்துவ கல்லுாரி டீன் வள்ளி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர்தீனதயாள் கூறியதாவது:பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைவது, மாலை நேர காய்ச்சல், இரவில் அதிகம் வியர்த்தல், நெஞ்சுவலி ஏற்படுவது, இரு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல் இருப்பது, காசநோய்க்கான அறிகுறி. இத்தகைய அறிகுறியுடன் இருப்பவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டு, சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவமனையை தேடி வர முடியாதவர்களுக்காக, அவர்கள் இடத்துக்கே சென்று, காசநோய் பரிசோதனை செய்யும் வாகனம், ஒரு மாதம் மாவட்டத்தில் பயணிக்கும். காசநோய் தாக்கம் உள்ள பகுதிகளில் முகாம் நடக்கும். சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்கள் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படும். பொதுமக்கள், இலவசமாக எக்ஸ்ரே எடுத்து, காசநோய் பரிசோதனை செய்து கொள்ளலாம். இனி, மாவட்டத்தில், மூன்று மாதத்திற்கு ஒரு முறைய சுழற்சி அடிப்படையில் வாகனம் இயக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X