பொது செய்தி

தமிழ்நாடு

மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளை பாதுகாப்புடன் வெட்டி அகற்றம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளை பாதுகாப்புடன் வெட்டி அகற்றம்

திருப்பூர்:திருப்பூர் நகரில்,மின்கம்பிகள் மீது சூழ்ந்துள்ள மரக்கிளைகள் பாதுகாப்புடன் வெட்டி அகற்றப்படுகிறது.திருப்பூர் நகரில், வீடுகள், கடை உள்ளிட்ட கட்டடங்களுக்கு மின்வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது பல இடங்களில் மரக்கிளைகள் படர்ந்துள்ளன.பலத்த காற்று வீசும்போது தீப்பொறி ஏற்படுகிறது.
இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும், மின் கம்பிகள் உரசுவதால், அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. பருவமழை துவங்கவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்கம்பிகளை சூழ்ந்து நிற்கும், மரக்கிளைகள் மட்டும் பாதுகாப்புடன் வெட்டி அகற்றப்படுகிறது.மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:நகரின் பல இடங்களில் மின் கம்பிகளை மரக்கிளைகள் சூழ்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், 4.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றுக்கான மின்சாரம், தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. பருவமழை துவங்கவுள்ளதால், டிரான்ஸ்பார்மர்களை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, உரிய வழிமுறைகளை பின்பற்றி, மின்கம்பிகளில் உரசி ஆபத்தை விளைவிக்கும் வகையிலான மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X