பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொற்று தடுப்பு குழு மாற்றியமைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், தொற்று தடுப்புக்கான அதிகாரிகள் குழு, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், கூடுதல் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், சென்னை முதல் இடத்தில் உள்ளது. களப்பணிமற்ற மாவட்டங்களில், பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பாதிப்பு அதிகரித்து வருகிறது.சென்னையில், தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 500ஐ தாண்டியபடி உள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது. இது, மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில், நோய் பரவலை தடுக்க, அரசு சார்பில், மண்டல அளவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள, ஆறு மண்டலங்களில், கூடுதலாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், எஸ்.பி., - மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி உயர் அலுவலர் அடங்கிய களப்பணி குழு அமைக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில், மூன்று மண்டலத்திற்கு, ஒரு களப்பணி குழு அமைக்கப்பட்டது.அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து, கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரியாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். நியமனம்இம்மாதம், 1ம் தேதி, இந்த நியமனம் நடந்தது. அவருக்கு உதவியாக, சென்னைக்கு நான்கு, புறநகர் பகுதிக்கு ஒன்று என, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது, ராதாகிருஷ்ணனுக்கு உதவியாக, போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தற்போது, சென்னையில் அனைத்து மண்டலத்திற்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.பி., அந்தஸ்தில், ஒரு போலீஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரன், போலீஸ் ஐ.ஜி., அன்பு; திருவள்ளூர் மாவட்டத்திற்கு, நகராட்சி நிர்வாக கமிஷனர் பாஸ்கரன், ஐ.ஜி., வனிதா.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்ரமணியன், டி.ஐ.ஜி., பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X